உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

குடிநீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி வெடித்த போராட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
72 பார்வைகள்

குடிநீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி இன்றையதினம் காரைநகர் – ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது திட்டமிடப்பட்டு இருந்தது. அந்தவைகையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திணைக்கள அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

அதனை தொடர்ந்து காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் தலைவர் சிறீபவானந்தராஜா, பிரதேச செயலாளர் உள்ளிட்ட பதவி நிலை அதிகாரிகள் சிலர் போராட்ட இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தி பணிகளில் தொடர்ச்சியாக எங்களை புறக்கணித்து வருகின்றனர். நடமாட்டம் குறைந்த காட்டுப் பகுதிகளில் உள்ள வீதிகளை காப்பெட் வீதிகளாக புனரமைக்கின்றனர். ஆனால் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதிகளை புனரமைப்பு செய்யவில்லை.

குடிநீர் வழங்கல் சீராக இடம்பெறவில்லை. எமது பகுதிக்கான குழாய்வழி மூலமான குடிநீர் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு தடவை கேட்டாலும் அதற்கு ஏதாவது சாட்டு கூறுகின்றனர்.

ஊரி பிரதான வீதியில் குடிநீர் வழங்கல் குழாய்களை புதைப்பதற்கான வரைபடத்தினை காண்பிக்கின்றனர். ஊரியில் எத்தனை கிராமங்கள் உள்ளன? அவற்றை எல்லாம் வரைபடத்தில் உள்ளடக்கவில்லை. கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை.

அரசியல் பழிவாங்கல் செய்கின்றார்கள். எங்களை எதற்காக புறக்கணிக்கின்றீர்கள்? எமது பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வையுங்கள் என்றனர்.

அதற்கு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதிலளிக்க முற்பட்டபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தமது கருத்துக்களை முன் வைத்தனர். இந்நிலையில் மூன்று பேரை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளே சென்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

45 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

45 0 0