உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

சுவீடன் பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
19 பார்வைகள்

சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் (Ulf Kristersson) அறிவித்துள்ளார்.

குறிப்பாக, சோசலிச இடது கட்சி மற்றும் தாராளவாத மையக் கட்சி (Centre Party) ஆகியவற்றுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை அவர் சரிசெய்ய வேண்டிவரும்.

நேற்று (17) நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் படி, ஸ்டொக்ஹோமில் உள்ள 349 இடங்களைக் கொண்ட ரிக்சடாக் (Riksdag) நாடாளுமன்றத்துக்காக, நான்கு இடதுசாரி எதிர்க்கட்சிகள் இணைந்து 176 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

தற்போதைய பழமைவாத கூட்டணி கட்சிகள் 173 இடங்களைப் பெற்றன.

இதன் மூலம் இடதுசாரி அணி, வெறும் மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

10.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில், இரு தரப்பினருக்கும் இடையே வெறும் 50,000 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தது.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மக்டலேனா அண்டர்சன் (Magdalena Andersson) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (Social Democrats) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இது, 2022 இல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அவரது நம்பிக்கையை இந்த முடிவு வலுப்படுத்தினாலும், இடதுசாரி அணியில் காணப்படும் சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கலான பணியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இடதுசாரி கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஆனால் மையக் கட்சியோ இடதுசாரிக் கட்சி இடம்பெறும் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.

மறுபுறம், 2010 இல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த குடியேற்ற எதிர்ப்பு கட்சியான ‘சுவீடன் டெமாக்ராட்ஸ்’ (Sweden Democrats), இந்த முறை 17.5 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்று, வரலாற்றில் முதன்முறையாக தனது ஆதரவை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

26 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

27 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியாக “சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற” டோகோ (Togo) நாட்டுக்கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இஸ்லாமியப்…

29 0 0
உலக செய்திகள்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புனிதத்…

52 0 0