உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
29 பார்வைகள்

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியாக “சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற” டோகோ (Togo) நாட்டுக்கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பயணம் தடைப்பட்டுள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஈரானுடன் நிலவிவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மீண்டும் ஒரு தீவிரமான தாக்குதல் தொடரை ஆரம்பிப்பது தொடர்பில் தான் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “எனக்கு விரைவில் ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. நான் உள்ளே நுழைந்து அவர்களை முழுமையாக அழிக்க வேண்டுமா இல்லையா? அது மிகப் பெரிய ஒரு முடிவு. என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

25 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

26 0 0
உலக செய்திகள்

சுவீடன் பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி

சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன்…

18 0 0
உலக செய்திகள்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புனிதத்…

52 0 0