உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
27 பார்வைகள்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் இன்று (18) தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீனின் வழிகாட்டலில், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் இச் சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இந்நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), பொலிஸார், முப்படையினர் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேரில் களமிறங்கினர்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள வீடுகள், அதனைச் சூழ்ந்துள்ள சுற்றுப்புறச் சூழல்கள் மற்றும் கைவிடப்பட்ட வெற்றிடங்கள் என்பன தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய சுகாதாரப் பிரிவினர், பொதுமக்கள் தமது வீடுகளிலும் வளாகங்களிலும் நீர் தேங்கி நிற்பதைத் தடுத்து நுளம்பு பெருகாதவாறு தூய்மையாகப் பேணுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது.!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர்…

6 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

26 0 0