உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

திமுகவின் முப்பெரும் விழா எதிர்வரும் 19-ம் திகதி நடைபெறவுள்ளது

இந்திய செய்திகள் 5 மணி நேரம் முன்
24 பார்வைகள்

எதிர்வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது திமுக முப்பெரும் விழா வருகிற 19-ம் திகதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்​பில் ஆண்​டு​தோறும் செப்​டம்​பர் மாதத்​தில் முப்​பெரும் விழா கொண்​டாடப்​படு​வது வழக்​க​மாகும். அண்ணா பிறந்​த​நாள், பெரி​யார் பிறந்​த​நாள் மற்​றும் திமுக தொடங்​கிய நாள் ஆகிய​வற்றை இணைத்து முப்​பெரும் விழா​வாக கொண்​டாடப்​பட்டு வருகிறது.

அதன்​படி நடப்​பாண்டு திமுக முப்​பெரும் விழா சென்னை அறிவால​யத்​தில் கடந்த 15-ம் திகதி நடத்த திட்​ட​மிடப்​பட்​டது. இதில் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்​டு, கட்​சி​யில் சிறப்​பாக செயலாற்​றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்​று​வார் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு திடீர் உடல்​நலக்குறைவு ஏற்​பட்​ட​தால், 15-ம் தேதி நடை​பெற இருந்த ‘முப்பெரும் விழா’ ஒத்​திவைக்​கப்​பட்​டது. தற்போது மாற்று திகதி அறிவிக்கப்பட்டு வரும் சனிக்கிழமை இந்த விழா நடைபெறுகிது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு உள்நாடு முதல்…

44 0 0
இந்திய செய்திகள்

“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” செப்டம்பர் 25 இல் அங்குரார்ப்பணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

46 0 0
இந்திய செய்திகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில்…

63 0 0
இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

33 0 0