உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ உட்கொள்ள முடியாமல் பல நாட்கள் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மனித மனங்களை உலுக்குவதாக அமைந்துள்ள இச் சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மூத்த கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவிக்கையில், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் கொடிய பொறிகளில் சிக்கி யானைகள் எதிர்கொள்ளும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது எனக் குறிப்பிட்டார்.

இக் கொடிய வெடிபொருள் வாய்க்குள் வெடிப்பதனால் யானைகளின் தாடை மற்றும் வாய் பகுதிகள் கடுமையாகச் சிதைந்துபோகின்றன. இதனால் ஏற்படும் கடுமையான வலி, காயம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக இப் பிராணிகளால் ஒரு துளி நீரைக் கூட அருந்த முடியாமல், யாருடைய உதவியும் இன்றி மெல்ல மெல்ல மரணத்தைத் தழுவுகின்றன.

அந்த வகையில், இக் குட்டி யானையும் எந்தத் தவறும் செய்யாத நிலையில், தீவிர வேதனையை அனுபவித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உலுக்கியுள்ளது.

கிழக்கு மாகாண வனவிலங்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், மகாஓயா வனஜீவிகள் யானை கட்டுப்பாட்டுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0
அம்பாறை செய்திகள்

ஹிஜாப் அணிந்து பொத்துவில் கலாச்சாரத்தை அனுபவித்த நியூசிலாந்து பெண்கள்.!

அம்பாறை மாவட்டம் பொத்துவில், அறுகம்பைப் பகுதியில் இயங்கி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) சுற்றுலா அமைப்பினூடாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மீன்பிடிப்…

64 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட…

75 0 0
அம்பாறை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

246 0 0