உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

பாரதிதாசனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி-யின் பதிவு

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே தவெக அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தனக்காக அரசின் கல்வித்தொகை வரவில்லை என கண்ணீருடன் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்

“மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.

அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது.

என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான துணைக்குழுவின் (IGSC) கூட்டம் செப்டம்பர் 16-17 ஆகிய திகதிகளில் புது டெல்லியில்…

23 0 0
இந்திய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை அழித்ததாக இந்திய இராணுவம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தினால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மஜால்டா பகுதியின் பிரட்டல் சோஹன் மற்றும் குப்பன் ஆகிய பகுதிகளில் ஜெய்ஷ்…

25 0 0
இந்திய செய்திகள்

திமுகவின் முப்பெரும் விழா எதிர்வரும் 19-ம் திகதி நடைபெறவுள்ளது

வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக…

35 0 0
இந்திய செய்திகள்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு உள்நாடு முதல்…

53 0 0