உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

நீதிச் சுதந்திரத்தை அழித்தவர்களோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்துக்காக போராடுவதா?

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
16 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபித்து, மக்களைத் திரட்டி எதிர்ப்பை காட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு ஜானகி ஹோட்டலில் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆராய்ந்த பின்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றினார். 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தாமும் தமது கட்சியினரும் முழுமையாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். ஆயினும் அந்தக் கூட்ட அறிக்கையில் கையெழுத்திட அவர் மறுத்து விட்டார்.

ஏற்கனவே இலங்கையின் நீதித்துறையில் மோசமான முறையில் தலையீடு செய்து அதன் சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புக்கள் அந்தக் கூட்டறிக்கையில் ஒப்பமிடுகின்றன என்றும், அவற்றுடன் சேர்ந்து நீதிச் சுதந்திரத்தை காப்பாற்ற போராடுவது என்ற பெயரில் நடிப்பதற்குத் தான் தயார் இல்லை என்றும் அவர் கூறினார்.

முன்னர் பிரதம நீதியரசர்களாக இருந்த நெவில் சமரக்கோனையும், ஷிராணி பண்டாரநாயக்காவையும் பதவியிலிருந்து முறையற்ற விதத்தில் அகற்றியமை மூலம் நீதித்துறை சுதந்திரத்தில் மோசமாக தலையிட்ட தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்தை பேணுதல் என்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றார் அவர். அத்தகைய தரப்புகளோடு சேர்ந்து இந்த விடயத்தில் கூட்டறிக்கையில் ஒப்பமிடுவது குறித்து தமது கட்சியின் அனுமதியைத் தான் பெற வேண்டி இருக்கும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.

”22 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பை காட்டுகின்றோம். நாடாளுமன்றத்திலும் அதனை வெளிப்படுத்தி வாக்களிப்பிலும் காட்டுவோம். ஆனால் அதற்காக நீதித்துறையில் மோசமான முறையில் தலையிட்டு, அதன் சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்திற்காகப் போராடுகின்றோம் என்று பாவனை பண்ண நாங்கள் தயார் இல்லை” – என்றார் சுமந்திரன்.

வரும் 24ஆம் திகதி கொழும்பில் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் போராட்டத்துக்குக் கட்சி பேதமின்றி ஆதரவு திரட்டும் விதத்தில் நேற்று மாலை இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கின் பிற தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0