தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்து; ஓய்வுநிலை ஆசிரியர் உ**யிரிழப்பு.!
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலி – கிளாலி வீதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் 65 வயதான ஓய்வுநிலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கட்டடப் பொருட்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா ரக வாகனம், ஓய்வுபெற்ற ஆசிரியர் பயணித்த உந்துருளியுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் உசன் பகுதியைச் சேர்ந்த 65 வயதான சி.சிவகரன் என்ற ஓய்வுநிலை ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.