உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் மீன்கள்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
27 பார்வைகள்

வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே இவ்வாறு மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன. இதனால் குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மீன்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமது பகுதியில் இடம்பெற்றதில்லை எனவும், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக இவ்வாறான இயற்கைக்கு மாறான சம்பவத்தை அவதானிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீன்கள் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வை மேற்கொண்டு, நீரின் தரம் மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட காரணிகளை பரிசோதிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

29 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

23 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

25 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடவே செயற்குழுவைப் பயன்படுத்துகின்றது அநுர அரசு.!

மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்…

31 0 0