தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து ஒருவரது ச**டலம் மீட்பு.!
தேயிலைத் தொழிற்சாலை பணிக்கு சென்றவர் உயிரிழந்த நிலையில் தொழிற்சாலை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று 17 ஆம் திகதி நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஸ்டொக்ஹொம் தோட்ட நூத்திபிரிவில் உள்ள தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே தோட்டத்தில் வசிக்கும் பெரியமுத்துசாமி ஆறுமுகம் வயது 69 என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த பல வருடங்களாக அதே தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.