ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை அழித்ததாக இந்திய இராணுவம் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தினால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மஜால்டா பகுதியின் பிரட்டல் சோஹன் மற்றும் குப்பன் ஆகிய பகுதிகளில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக இந்திய இராணுவத்திற்கு கரகசிய தகவல் கிடைத்தது.
சவாலான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் குறைந்த பார்வைத்திறன் ஆகிய தடைகளையும் மீறி ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர், காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து தீவிராத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின்போது இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தியது.