உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

பற்றி எரிந்த கல்லுண்டாய் குப்பை மேடு; அங்கு குவிந்த மக்களால் பரபரப்பு!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
45 பார்வைகள்

நேற்றைய தினம் கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு பற்றி எரிந்ததால் அங்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் குப்பைமேடானது நேற்றையதினம் பற்றி எரிந்தது. இதனால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி சுமார் 2 கிலோ மீற்றருக்கு மேலாக புகை மண்டலத்தால் மூடப்பட்டிருந்தது.

அத்துடன் நவாலி கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சு புகை சென்றது. இதனால் குப்பைமேடு பகுதிக்கு வந்த நவாலி பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இருந்தும் தீயணைப்பு இடம்பெறவில்லை. தீயினை அணைக்குமாறு மக்கள் கூறியும், மாநகர சபையின் பணியாளர்கள், வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலையில் பாதை உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கோபமுற்ற மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் எரியும் இடத்தினை போய் பார்வையிட்ட பின்பு, அந்த இடத்திற்கு செல்வதற்கு வழி சீராக இருப்பதாகவும், உடனடியாக தீயினை அணைக்குமாறும் கூறினர். இருப்பினும் மாநகர சபையினர் அதற்கும் செவிசாய்க்கவில்லை. அதன் பின்னர் பொலிஸார் கடும் தொனியில், தீயை அணைக்குமாறு கூறியபோது அதனை அணைக்க முயன்றனர்.

குறித்த குப்பை மேடானது வாரா வாரம் தொடர்ச்சியாக எரிகிறது. இருப்பினும் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபையோ, மானிப்பாய் பிரதேச சபையோ அதனை தடுப்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

நேற்றையதினம் கூட குறித்த பகுதிக்கு வந்த மக்கள் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தை ஜெசீதனுக்கு அழைப்பு மேற்கொண்டு அந்த விடயத்தை தெரியப்படுத்தியும், அவர் அங்கு வர முடியாது என்று மறுத்து விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அந்த தீயை அணைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0