உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

செம்மணி புதைகுழி மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் பேரணி!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
96 பார்வைகள்

செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக இன்று நல்லூர் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிபி்பிடபப்பட்டுள்ளதாவது,

​செம்மணி சித்துப்பாத்தியில் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ளன. குற்றமிழைத்த சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இந்த சான்றுப் பொருட்கள் இருப்பது, ஆதாரங்கள் அழிக்கப்படும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.

​எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களைக் கொண்டு செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

​இவ் அவசரக் கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ்த்தேசியப்பேரவை மற்றும் குடிசார் அமைப்புக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் பேரணிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

​செப்டம்பர் 13 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகும் குறித்த ஊர்வலம் கோவில் வீதி வழியாக கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) வரை சென்று, அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும்.

​இந்த போராட்டத்தின் முதன்மை கோரிக்கைகளாக

​1.சர்வதேச புதைகுழி விசாரணை: செம்மணி உள்ளிட்ட புதைகுழிகளை UN மேற்பார்வையில் சர்வதேச நிபுணர்கள் அகழ்வு செய்ய வேண்டும்.

2.சுயாதீன சர்வதேச விசாரணை: தமிழ் இனப்படுகொலைக்கு பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்.

3.சர்வதேச பொறுப்புக்கூறல்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மற்றும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஊடாக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி: உள்ளகப் பொறிமுறைகள் தோல்வியடைந்ததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை அறியும் உரிமை மற்றும் நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்.

5.அரசியல் கைதிகள் விடுதலை: பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) உடனடியாக நீக்கப்பட்டு, நீண்டகால அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

6.இராணுவமயமாக்கல் முடிவுக்கு வருக: வடகிழக்கிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.

7.நில உரிமை பாதுகாப்பு: தையிட்டி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான், கேப்பாபிலவு உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

8.திட்டமிட்ட குடியேற்றத் தடுப்பு: தொல்லியல், வனவளத் துறைகளின் பெயரால் நடக்கும் திட்டமிட்ட இனப்பரம்பல் மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

9.பண்பாட்டுரிமை பாதுகாப்பு: தொல்லியல் மற்றும் மதத்தின் பெயரால் தமிழர்களின் மரபுரிமைகளை ஆக்கிரமிப்பதை சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை மூலம் தடுக்க வேண்டும்.

10.சுயநிர்ணய உரிமை அங்கீகாரம்: ஒற்றையாட்சித் தீர்வுகளை நிராகரித்து, தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் நிரந்தர அரசியல் தீர்வு உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே ’22’ பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்? – சஜித் கேள்வி!

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே’22’ பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்? நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாகக்…

103 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இரு பெண்கள் கைது.!

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான…

137 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உ*யிரிழப்பு.!

கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும்…

103 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை; இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளார் என்று ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகர்…

70 0 0