உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே ’22’ பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்? – சஜித் கேள்வி!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
106 பார்வைகள்

நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிப்பது எவ்வாறு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“20 ஆவது திருத்தத்தின்போது, அதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் போதாது என்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்றும் அன்று அநுர குமார திசாநாயக்க கூறினார். ஆனால், அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலேயே அதனை நிறைவேற்றுவதாகக் குறிப்பிடுகின்றார். கண்ணியத்துக்குரிய நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத சூழலில், ஜனாதிபதி முன்கூட்டியே தீர்ப்பளிப்பது போன்ற பாணியில் கருத்துத் தெரிவிப்பது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகும்.

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பது அரசுகளின் நிறுவனமாக இல்லாவிட்டாலும், பொதுநலவாய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ அமைப்பாகும். இந்தச் சங்கம் ஸிழிமிஷ்துer க்ஷிலிற்விe கோட்பாடுகளை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்துள்ளது. ஆனால், அரசு இதனைப் பணம் செலுத்திச் செயற்படும் அமைப்பு எனக் கூறித் தரம் தாழ்த்திப் பேசியுள்ளது.

22 ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தச் சங்கம் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளதுடன் நீதி அமைச்சரும் அதிகாரிகளும் அதன் தலைவரைச் சந்திப்பதைத் தவிர்த்துள்ளனர். எனவே, நீதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தச் சங்கத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

ஊடகத்துறையை அடக்கும் நோக்கத்துடன் இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை உருவாக்க அரசு முற்படுகின்றது. இது ஊடகச் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண அடியாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடகங்களை அடக்குவதற்கு எதிர்க்கட்சி இடமளிக்காது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொ@லைச் சதி!

மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொ@லை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, ‘வலன’ மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு – வேலணை அராலிச் சந்தியில் சம்பவம்!

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல்…

94 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் பேரணி!

செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக…

97 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இரு பெண்கள் கைது.!

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான…

138 0 0