உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

அராலியில் கிணறுகள் பெருக்கெடுத்த அதிசயம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
93 பார்வைகள்

அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது.

அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.

இது குறித்து அந்த ஊரில் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும்.

இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

98 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

107 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

101 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் உயரிய கௌரவம்.!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உயரிய அதிகாரப்பூர்வ கௌரவச் சான்றிதழை வழங்கிச்…

82 0 0