உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
58 பார்வைகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றையதினம் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

​இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதியை நிலைநாட்டுதல், அதற்கான சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டினை ஏற்படுத்தல், மனித உரிமைகளுக்குப் புறம்பான பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதையும், அதைப் பயன்படுத்தித் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் அநீதியாகக் கைது செய்யப்படுவதையும் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

​அத்துடன், பல தசாப்தங்களாக எவ்விதத் தீர்வுமின்றித் தொடரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, நீடித்து நிலைக்கக் கூடிய, உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான, கௌரவமான, நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்குரிய முயற்சிகள் குறித்தும், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொடரும் காணி பறிப்பு, உள்ளக இடப்பெயர்வுகள், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் திட்டமான கீழ் மல்வத்து ஓயா திட்டம் ஆகியவை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

116 0 0
இலங்கை செய்திகள்

எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி.!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

82 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவி கௌரவிப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலாமிடத்தையும், கல்முனைக் கல்வி வலயத்தில் முதன்மை…

78 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு.!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி (SLEAS III) அருட்தந்தை ஜெ. லெபோன் சுதன் நேற்று…

60 0 0