உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

மகாராஷ்டிராவில் தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் விபரீதம் – சிறுவன் உட்பட இருவர் பலி!

இந்திய செய்திகள் 7 மணி நேரம் முன்
134 பார்வைகள்

மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் மீது தூண் சரிந்து விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.

மும்பை மலாட் பகுதியை இளைஞர் குழுவினர், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக முன் அனுமதியின்றி தாங்களாகவே திருவிழா ஒன்றை நேற்று கொண்டாடினர். அப்போது அந்த திருவிழாவில் தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை காண்பதற்காக மலாட் கிராமத்தில் திரளான மக்கள் ஒன்றாக கூடினர். அப்போது இளைஞர்கள் ஒன்றாக பிரமிட் வடிவத்தில் நின்று, கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பானையை உடைக்க முயன்றனர்.

இந்த போட்டியை காண்பதற்காக அந்த கூட்டத்தில் ஏழு வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

தயிர் பானையை தாங்கி கொண்டிருந்த கயிறு, ஒரு மரத்திற்கும் தரைத்தள கட்டிடத்தின் செங்கல் தூணுக்கும் இடையில் கட்டப்பட்டு இருந்தது.

அந்த சமயத்தில் இளைஞர்கள் பானையை உடைக்க முயன்றபோது, அங்கே இருந்த தூண் ஒன்று சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது.

இதையடுத்து தூண் சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிறுவனின் தலை மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, மால்வானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதேபோன்று மகராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியில், ஒரு இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில், சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், மனித பிரமிடுகளை அமைக்கும் போது, போட்டியில் கலந்துகொள்பவர்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசினார். முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி…

76 0 0
இந்திய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை!

இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றப் பதிலுரையின் போது பேசிய…

112 0 0
இந்திய செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அநீதிக்கு எதிராக அறம் வெல்லும் என்றும், எத்தகைய சூழலிலும் கடமை…

79 0 0
இந்திய செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீட்க முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என…

90 0 0