உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

போ*தைப்பொருளுடன் இரு பெண்கள் கைது.!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
136 பார்வைகள்

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் பேரணி!

செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக…

95 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உ*யிரிழப்பு.!

கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும்…

100 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை; இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளார் என்று ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகர்…

68 0 0
இலங்கை செய்திகள்

ஆண் ஒருவரின் ச*டலம் மீட்பு.!

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து 46 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தை சேர்ந்த சவரியார் பிரான்சிஸ் என்பவரே இவ்வாறு…

70 0 0