பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை!
இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றப் பதிலுரையின் போது பேசிய அவர், இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட ஒரே அரசு தமது தமிழக வெற்றி கழக அரசுதான் எனக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களைச் சந்தித்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இனி பெண்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், எந்தவொரு பெண்ணும் அவமானப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையில் மக்களையோ அல்லது பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர், தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
நம் வீட்டில் தாய், அக்கா, தங்கச்சியாக இருப்பது அதே பெண்கள்தான் என்பதை மனதில் வைத்துப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.