உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

​மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர், உபதலைவர், செயலாளர், உறுப்பினர்கள், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து இவருக்குத் தமது நல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

​இவர் தற்போது பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் ஆளும் கட்சியோடு இணைந்து தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்த திசாநாயக்க அவர்கள் விளகிய பின்னர் புதிய ஒருவரை ஜக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் நியமிக்க வேண்டிய நிலையில் இம் முறை மஸ்கெலியா குடா மஸ்கெலியா பகுதியில் போட்டியிட்ட நலிந்த பிரதீப் நியமனம் செய்ய பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு

இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.…

103 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியைக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

99 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கான முறையான தேசிய கொள்கையை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கம்.!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேரடி தலையீடு செய்து, இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை ஏற்பாடு…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் இருந்து சபைக்கு வந்த நாமல் : சபையில் அனுர அரசை கடுமையாகச் சாடல்!

சிறைச்சாலையில் இருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது கைது அல்லது நிலுவையில் உள்ள…

97 0 0