உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களைச் சோதனை செய்யும் சீனா!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
146 பார்வைகள்

சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ‘PLA டெய்லி’, ஆய்வகங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவ பயன்பாட்டுக்கு விரைந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

உலகளவில் உற்பத்தியாகும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிக்கின்றன.

இந்த வணிக ஆதிக்கத்தை இராணுவப் பயன்பாட்டிற்கும் சீனா பயன்படுத்தி வருகிறது.

ஏற்கனவே, கட்டடங்கள், சுரங்கங்கள் மற்றும் கப்பல்களுக்குள் எதிரிகளை எதிர்கொள்ளும் வகையில், மனித வீரர்களுடன் இணைந்து செயல்படும் ‘போர்க்கள ரோபோக்களை’ (Combat Robots) உருவாக்கும் திட்டங்களை சீன இராணுவ ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்தநிலையில், நொரின் கோ (Norinco) என்ற அரசுடமை பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள ‘புசி’ (Fuxi) போன்ற ரோபோக்கள், மனிதர்களின் தொலைதூரக் கட்டுப்பாட்டு மூலம் (teleoperation system) கண்காணிப்பு பணி மற்றும் ஆபத்தான பணிகளைச் செய்யக்கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவமும் கடந்த ஆண்டு இதுபோன்ற ‘இராணுவ மனிதவடிவ ரோபோ’ (militarized humanoid capabilities) திட்டங்களுக்கான போட்டிகளைத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், ரோபோ தயாரிப்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் போர் முடிந்தால் எண்ணெய் விலை பெருமளவு குறையும் – ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான மோதல் முடிவுக்கு வந்தவுடன் மசகு எண்ணெய் விலைகள் பெருமளவு குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு…

131 0 0
உலக செய்திகள்

கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு ட்ரம்ப் அறிவுறுத்தல்!

அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த ‘போம்பார்டியர்’ (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

109 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட முன்வருமாறு இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!

அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை…

113 0 0
உலக செய்திகள்

பிரித்தானியத் துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரிக்கை!

இஸ்ரேலில் தங்கியுள்ள பிரித்தானியாவின் தூதரை “இன்றிரவுக்குள்” வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரியுள்ளார். பிரித்தானிய அரசாங்கம் “யூத வெறுப்பு” (anti-Semitic)…

118 0 0