உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலங்களின் அவல நிலை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
66 பார்வைகள்

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது இலுப்பைக்கடவை பகுதியைத் தாண்டியுள்ள முதல் பாலம் மற்றும் சிப்பியாறு அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இரண்டு பாலங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விரிசல்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதாகவும், தற்போது மழைக்காலமும் நெருங்கி வரும் நிலையில், பாலங்களின் நிலை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீதியே நாளாந்தம் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளர் காவு வண்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், “பாலம் முழுமையாக சேதமடைந்த பின்னர் தான் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA)யின் கவனம் திரும்புமா?” என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த மழைக்காலத்தில் விடத்தல் தீவு அருகே உள்ள மின்னி எறிஞ்சான் பாலம் வெள்ளத்தால் எதிர்கொண்ட நிலையை நினைவு கூறும் மக்கள், இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரதான வீதியின் இருபுறங்களிலும் படர்ந்துள்ள மரங்கள் மற்றும் செடிகளையும் அகற்றி, வாகன ஓட்டிகளின் பார்வைத்திறன் மற்றும் பயண பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுக்கின்றது அரசு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

61 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே.!

பொருளாதார ரீதியில் பாழடைந்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு.!

தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை…

68 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது…

72 0 0