உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறையில் இருந்து சபைக்கு வந்த நாமல் : சபையில் அனுர அரசை கடுமையாகச் சாடல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
170 பார்வைகள்

சிறைச்சாலையில் இருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது கைது அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பில் எவ்வித கருத்தையும் முன்வைக்காது , நாட்டின் பொருளாதார நெருக்கடி, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து ஆளுங்கட்சி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் இன்று நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ கூறியவை வருமாறு :

“நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களையும் உதவிகளையும் இந்த அரசு வழங்கத் தவறிவிட்டது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது தெரியவில்லை.
அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அது வழங்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. எனவே, தயவுசெய்து நேபாளத்தை ஏமாற்றிவிட வேண்டாம். இது சர்வதேச மட்டத்தில் நமது நாட்டுக்கு நல்லதல்ல.

சுகாதாரத்துறையை மேம்படுத்துவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முறையான தலையீடுகளை அரசு மேற்கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், தற்போது வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர். கிராமப்புற மக்கள் முழுமையாக அரச வைத்தியசாலைகளையே நம்பியுள்ளனர்.

எனவே, கொத்தமல்லி குடித்துவிட்டு வீட்டில் இருக்குமாறு கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் கிடையாது. டெங்கு நோயாளர்களும் கொத்தமல்லி குடித்துவிட்டுத் தூங்க முடியுமா?

கொத்தமல்லி குடிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நோயாளிகளுக்கு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் அடிப்படை உரிமை இருக்க வேண்டும்.

கதைகளைக் கூறி இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் கட்டடங்களின் இரண்டாம் மாடிக்கு அடிக்கல் நாட்டுங்கள் அல்லது மலசலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுங்கள். ஆனால், முதற்கட்டமாகக் கொத்தமல்லி விலையைக் குறைக்கவும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுங்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை கோரி நவம்பர் மாதம் செம்மணியில் மாபெரும் போராட்டம்.!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு –…

1 0 0
இலங்கை செய்திகள்

குத்துச் சண்டைப் போட்டி; வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாவட்டங்களுக்கிடையில் மாகாண ரீதியாக பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட…

72 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த மகா சங்கத்தை அவமதிக்கும் ஜனாதிபதி; மஹிந்தவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச்…

67 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி.!

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும்…

71 0 0