உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
105 பார்வைகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் கூட்டமைப்பை (IPPF) பிரதிநிதித்துவப்படுத்தி ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கக் குழுக்களுடன் இணைந்து கலந்துகொண்ட நினைவுகளையும், பல தசாப்தங்களாக ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் டயஸ்போராவிற்கு எதிராக குரல்கொடுத்து வரும் ரோஷன் மற்றும் பிரையன் ஆகியோருடன் தற்போதைய பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்தப்பட்ட உரையானது நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் ஜனநாயக விவகாரங்களை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

குறிப்பாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்டோர் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்படும் கட்டாயத் தடுத்து வைப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தினால் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்படும் தடைகள் குறித்தும் சர்வதேசத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களின் சுகாதார உரிமைகள் குறித்துப் பேசிய நிலையில், இன்று நாட்டின் பிரச்சினைகள் மாறியுள்ளபோதிலும், தான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற தாராளமய ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் இங்கு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கான முறையான தேசிய கொள்கையை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கம்.!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேரடி தலையீடு செய்து, இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை ஏற்பாடு…

64 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக…

77 0 0
இலங்கை செய்திகள்

ஆசிரியர் சேவைக்கு தகுதி பெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்.!

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான…

109 0 0
இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

86 0 0