உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

ஆசிரியர் சேவைக்கு தகுதி பெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
109 பார்வைகள்

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், மாகாண கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கான முறையான தேசிய கொள்கையை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கம்.!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேரடி தலையீடு செய்து, இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை ஏற்பாடு…

64 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக…

77 0 0
இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

86 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

104 0 0