உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பெருந்தொகை போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 59 நிமிடங்கள் முன்
69 பார்வைகள்

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் சேதவத்தை கசுன் என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியின் உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் இதன்போது சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

34 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக் குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்.!

கிளிநொச்சி இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக்குளம் ஆகியவற்றில் இன்று 58ஆயிரத்து 315இற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

62 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை; 56,000 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 289 867 பரீட்சாத்திகளில் 56000 பேர் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…

54 0 0
இலங்கை செய்திகள்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.!

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும்…

57 0 0