உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
94 பார்வைகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் – தாவடியில் நடைபெற்றது.

தாவடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற நிகழ்வில், அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985ஆம் ஆண்டு செப்டெம்பர் 2ஆம் திகதி தாவடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1918ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி கந்தரோடையில் பிறந்த அவர், உடுவில் கிராம சபையின் தலைவராக ஐந்து தடவைகளுக்கும் மேல் தொடர்ச்சியாகவும், பின்னர் சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பணியாற்றினார்.

1960 முதல் 1983ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து தடவைகள் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0