உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

மகள்களின் கல்விக்காக வெறும் காலில் ஓடி வெற்றி பெற்ற தாய்

இந்திய செய்திகள் 2 வாரங்கள் முன்
87 பார்வைகள்

மகள்களின் உயர்கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் காலணிகள் இன்றி வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடத்தைப் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் இடம்பெற்ற விபத்தில் கணவரை இழந்த பின்னர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார். விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தனது மகள்கள் இருவரும் கல்வி கற்று உயர் பதவிகளை அடைய வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

மூத்த மகளை போட்டித் தேர்வு பயிற்சி நிலையத்தில் சேர்த்த அவர், மகளின் கல்விச் செலவுக்கு உதவும் வகையில் அதே நிலையத்தில் சமையல் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற ‘அமிர்த தௌட்’ என்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மகள்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு இந்தப் பணம் உதவும் என கருதிய ரமாபாய், போட்டியில் பங்கேற்றுள்ளார்.

மாரத்தான் போட்டியில் ஏனையவர்கள் விளையாட்டு உடைகளுடன் பங்கேற்ற நிலையில், ரமாபாய் சேலை அணிந்து ஓடினார். போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவரது செருப்புகள் நழுவியதால், அவற்றைக் கழற்றி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலில் ஓடத் தொடங்கினார்.

கற்கள் நிறைந்த சாலையையும் பொருட்படுத்தாமல் ஓடிய அவர், ஏனைய போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

மகள்களின் எதிர்காலத்திற்காக கடுமையான சூழலிலும் விடாமுயற்சியுடன் போராடி வெற்றி பெற்ற ரமாபாயின் செயல், அங்கிருந்த பார்வையாளர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

123 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

112 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

166 0 0
இந்திய செய்திகள்

“இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது…

101 0 0