உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வடக்கில் 54 நீர்ப்பாசனக் குளங்களில் 43 குளங்களின் நீர்மட்டம் குறைவு!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
82 பார்வைகள்

வடமாகாணத்தில் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களைப் பராமரித்து வருகிறது.

அவற்றில் விசுவமடு குளம் உள்ளிட்ட 3 குளங்களில் மாத்திரமே சுமார் 50 சதவீத நீர் காணப்படுவதாகவும், இரணைமடு குளம் உள்ளிட்ட 8 குளங்களில் சுமார் 25 சதவீத நீர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 43 குளங்களிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாகவும், பெரும்பாலான குளங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவான நீரே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாகவும், இதற்கு எல் நினோ தாக்கம் மாத்திரமன்றி, புனரமைப்புப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டமை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை நீர் ஆவியாகின்றமை ஆகியவையும் முக்கிய காரணங்களாகும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காலபோகச் செய்கையை செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், தற்போதைய குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர் வழங்குவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழைவீழ்ச்சி மற்றும் குளங்களின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்த பின்னரே காலபோகச் செய்கைக்கான நீர் விநியோகம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது என வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

40 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

41 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0