இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக் குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்.!
கிளிநொச்சி இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக்குளம் ஆகியவற்றில் இன்று 58ஆயிரத்து 315இற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இவ்வாறு இன்றைய தினம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.
இன்று (02-09-2026) பிற்பகல் 4.30 மணிக்கு இரணைமடுக்குளத்திலும் தொடர்ந்து கல்மடுக் குளத்திலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
