உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

தனது சட்டமன்ற உறுப்பினர்களிடம் சத்தியம் வாங்கிய தமிழக முதல்வர்!

இந்திய செய்திகள் 2 வாரங்கள் முன்
96 பார்வைகள்

வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது என்று திண்டுக்கல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் நிலை குறைய வேண்டும் என்றும். குடும்பப் பிரச்சினைகளால் பெற்றோர்களைப் பிரித்து வைக்கும் போக்கு மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னைய காலங்களைப் போல் அல்லாமல், இன்றைய காலத்தில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

17 0 0
இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

133 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

120 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

179 0 0