உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

யாழ். பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு?

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
93 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான நிரந்தர நியமனத்தில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்ற நிலையில், 71 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நீண்டகாலமாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தங்களைப் புறக்கணித்து, புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலத்தை கருத்திற்கொண்டு நியாயமான தீர்வை வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0