இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து
தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த மற்றுமொரு டிபர் லொறி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் காரணமாக இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. எனினும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த வீதியின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுவதாகவும், இதனை சீரமைக்குமாறு பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


