உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
51 பார்வைகள்

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

பதவிஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தாய், அவரது 26 வயதுடைய மகள் மற்றும் பிறந்து 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகிய மூவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியைச் செலுத்திய 31 வயதுடைய சாரதி பலத்த காயமடைந்து கெபிதிகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதவிஸ்ரீபுர பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அனுராதபுரத்திலிருந்து கெபிதிகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் ஒன்றோடொன்று மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கெபிதிகொல்லாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

43 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

63 0 0