உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அமெரிக்கப் பொருட்களுக்கு கனடாவில் வரி!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
45 பார்வைகள்

அமெரிக்காவுடன் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகப் பதிலடித் தீர்வைகளை (Retaliatory Tariffs) கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், 27.6 பில்லியன் கனேடிய டொலர்கள் ($19.9 பில்லியன்) மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா வரி விதிக்கவுள்ளது.

இதன்படி, இரும்பு (Steel), அலுமினியம், பால் பொருட்கள், உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், கூழ் மற்றும் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு குறித்த தீர்வைகள் பொருந்தும்.

இந்தத் தீர்வைகள் 15% முதல் 50% வரை என்ற வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.

வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 7.5 பில்லியன் கனேடிய டொலர் ($5.42 பில்லியன்) நிதி உதவிப் பொதியையும் கனேடிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்கள் மீது 50% வரியை விதித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

அத்துடன், கனடாவின் வாகனத் துறை மீதான வரிகளை இரட்டிப்பாக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க நுகர்வோரே அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சுமை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. ஹோர்முஸ்…

63 0 0
உலக செய்திகள்

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குழந்தை…

38 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு…

49 0 0
உலக செய்திகள்

பேரான் ட்ரம்ப்பைக் கொ@லை செய்ய சதித்திட்டம் – அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகன் பேரான் ட்ரம்ப்பைக் (Baron Trump) கொலை செய்வதற்கான சாத்தியமான சதித்திட்டம் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி…

68 0 0