உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கெஹல்பத்தர பத்மேவின் கைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்; சிக்கப்போகும் முக்கிய நபர்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
64 பார்வைகள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள் தொடர்பான தகவல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஏழு நடிகைகள் மற்றும் மொடல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், குறித்த தகவல்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அல்லது அவர்களுடன் தொடர்புடைய பதிவுகள் காணப்படுவது மாத்திரம் அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அர்த்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், அவற்றில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

மீட்கப்பட்ட தரவுகளில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326000க்கும் அதிகமான புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 காணொளிகள் அடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி இலக்கங்களும் குறித்த கைபேசிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 17 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, சர்வதேச நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த…

57 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

63 0 0
இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் காணப்படும் பாலம்; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

தலவாக்கலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் உள்ள பிரதான பாலம் சுமார் 150 வருடங்கள்…

50 0 0
இலங்கை செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.!

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்…

43 0 0