போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!
நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொரதொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 1 கிலோகிராம் 69 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வெல்லம்பிட்டி – ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 60 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் கடுவெல மற்றும் பின்னவல – வக பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.