உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
128 பார்வைகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகம் தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக மதுரையிலிருந்து 200 பெட்டிகளில் தங்கச்சிமடத்துக்கு அனுப்பப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (14) பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமாா் 10 இலட்சம் இந்திய ரூபாயாக இருக்கும் எனவும், பொதியில் அனுப்பிய முகவரி போலி என்பதால் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

68 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

93 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

79 0 0