உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

இந்திய செய்திகள் 19 மணி நேரம் முன்
77 பார்வைகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று ரோடு ஷோ மேற்கொண்டார்.

அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவும் தாராபுரம் – கரூர் சாலை, வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, ஒரே பகுதியில் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் சாலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனால் நாதக வேட்பாளர் கார்த்திகாவின் வாகனம் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் கட்சியின் பெயர்களை கூறி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் முதலமைச்சர் விஜயின் வாகனங்கள் அங்கிருந்து செல்லும் வகையில் வழி ஏற்படுத்தினர்.

இருப்பினும், நாதகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, உரிய அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட சுமார் 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

91 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

83 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் அறிமுகமான தானியங்கி சுங்கச்சாவடி !

தமிழ்நாட்டில் முதல்முறையாக பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல், தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக வார இறுதி…

97 0 0