உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம்; கஜேந்திரன் உட்பட நால்வருக்கு பொலிஸ் அழைப்பாணை.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
88 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, தியாக தீபம் திலீபனின் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பொன். மாஸ்டர் மற்றும் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோருக்கும், தியாக தீபம் திலீபனின் காப்பகத்துக்கு நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைக்காக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நால்வருக்கும் தனித்தனி அழைப்புக் கடிதங்கள் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவர்களை இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சமூகமளிக்குமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

70 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

56 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

74 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

68 0 0