உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்திய செய்திகள் 16 மணி நேரம் முன்
91 பார்வைகள்

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சில பெண் ஊடகவியலாளர்கள் தகாத முறையில் தொடுதல் உள்ளிட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான முறைப்பாடு நியாயமான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஊடக அமைப்புகளும் சம்பவத்தைக் கண்டித்து உடனடி நடவடிக்கை கோரியுள்ளன.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கம் போலியான பதிவுகள் மற்றும் வாக்களிக்கத் தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

83 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

76 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் அறிமுகமான தானியங்கி சுங்கச்சாவடி !

தமிழ்நாட்டில் முதல்முறையாக பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல், தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக வார இறுதி…

97 0 0