தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று
தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் பி.சுகந்தி, நாதக சாா்பில் ஜானகிராமன் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 27 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் பி.சத்தியபாமா, திமுக சாா்பில் செள.சுகன்யா, அதிமுக சாா்பில் கே.பானுமதி, நாதக சாா்பில் மு.காா்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ப.லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளா்கள் உட்பட 22 போ் களத்தில் உள்ளனர்.
இதேவேளை 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.