உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
52 பார்வைகள்

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயற்படாமல், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி எரிபொருள் மீதான சலுகைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தவாறு சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட கடன் நிலைபேறாக்கல் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க அரசு தவறிவிட்டது. தற்போது பழைய முறைமையிலேயே அந்த இணக்கப்பாடுகள் தொடர்வதால் அதுவே அரசுக்குத் திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறியுள்ளது.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மீறி, செலவை ஈடுகட்டும் எரிபொருள் விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்த இந்த அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

அரசு குறிப்பிடுவது போல 17 ஆயிரத்து 315 ரூபாவைக் கொண்டு ஒருவரால் மாதத்தில் வாழ முடியாது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் போலியான தரவுகளைப் பயன்படுத்தாமல், மின்சார நுகர்வு போன்ற முறைகள் ஊடாக குறைந்த வருமானம் பெறுவோரை விஞ்ஞானபூர்வமாக அடையாளம் கண்டு சலுகைகளை வழங்க வேண்டும்.

செல்வந்தர்களுக்கு அல்லாமல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள சாதாரண மக்களுக்குத் திட்டவட்டமான பொறிமுறை ஊடாகச் சலுகைகளை வழங்குவதற்கு எதிர்க்கட்சி எப்போதும் எதிர்ப்புத் தெரிவிக்காது.

இனிமேலாவது ஐ.எம்.எவ்பின் கைப்பாவையாக மாறிவிடாமல், மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறைசேரி நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

6 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

70 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0