உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

உலக செய்திகள் 20 மணி நேரம் முன்
79 பார்வைகள்

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இன்று (04) காலை ‘பிவ்னிச்னி’ (Pivnichnyi – வடக்குப் பாலம்) பாலம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பாலத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, இந்த வார தொடக்கத்தில் ‘பிவ்டெனி’ (Pivdennyi – தெற்குப் பாலம்) பாலம் மீதும் பலமுறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜேர்மன் சான்ஸலர் ஃப்ரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz), ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக யுக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு கீவ் நகருக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கீவ் உட்பட யுக்ரைனின் ஏனைய பகுதிகள் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

59 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

99 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

105 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

116 0 0