உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
60 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

தமது தொடர்பாடல்கள் மூலம் சிவராசா அனோஜன் பற்றிய விடயங்களை உன்னிப்பாகக் கவனித்து நேரத்துடன் தகவல்களை வெளியிட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் இந்தத் தகவலைத் தமது முகப் புத்தகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

‘அவசரம் – அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்’ என்ற தலைப்பில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-

“சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் தீவிரமான கவலை எழுந்துள்ளது.

எனவே சவூதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்புக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

அவர் மீதான வழக்கு அல்லது வழங்கப்பட்டுள்ள தண்டனை எதுவாக இருந்தாலும், அரச காவலில் இருக்கும் ஒருவரின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதுடன், இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணையும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஒரு பாரதூரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

156 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0