உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
10 சனி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உலக செய்திகள் 7 நாட்கள் முன்
120 பார்வைகள்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாலத்தின் வீதி பகுதி மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மேல்நிலை மின் கம்பிகள் சேதமடைந்ததாக கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். 

இதனால் பாலத்தின் வழியாக ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்குச் செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீவின் மற்றொரு முக்கிய பாலமான தெற்கு பாலம் மீது ரஷ்ய ட்ரோன்கள் பலமுறை தாக்குதல் நடத்தியிருந்தன. 

இதன் காரணமாக அந்தப் பாலத்தின் வழியாக நடைபெறும் மெட்ரோ மற்றும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கீவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த இரு முக்கிய பாலங்களும் இதற்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகாத நிலையில், சமீபத்திய தாக்குதல்கள் ரஷ்யாவின் போர்த் தந்திரத்தில் புதிய கட்டத்தைக் காட்டுவதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 30 இலட்சம் மக்கள் வசிக்கும் கீவில், பொதுப் போக்குவரத்துக்கு மெட்ரோ சேவையை பெரிதும் நம்பியுள்ள நிலையில், முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நகரின் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே ரஷ்யா செயல்படுவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை திட்டமிட்டு அழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மாலைத்தீவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றம்!

மாலைத்தீவில் தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, விசா விதிகளைப் புதுப்பிக்க அந்தநாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வணிக விசா அல்லது விசேட விசாவைப்…

89 0 0
உலக செய்திகள்

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளும் பாதிப்பு

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும்…

70 0 0
உலக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…

59 0 0
உலக செய்திகள்

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit…

101 0 0