உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செங்கடலின் கரையோரத்தில் யேமன் அரச படைகள் தீவிர இராணுவ நடவடிக்கை

உலக செய்திகள் 55 நிமிடங்கள் முன்
74 பார்வைகள்

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யேமன் அரசாங்கம், செங்கடல் கரையோரப் பகுதிகளில் முக்கிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொப் அல்-மந்தப் நீரிணை முதல் மொக்கா நகரம் வரையிலான பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த மாதம் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையின் போது செங்கடல் கரையோரப் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை விரட்டியடித்துள்ளதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையம், ராபிக் பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அப்ஹா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் கமீஸ் முஷைத் இராணுவத் தளம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

84 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

64 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

108 0 0