உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தோட்ட முகாமையாளரை நீக்கக் கோரி தொடர் வேலைநிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
82 பார்வைகள்

பதுளை, உனுகல்ல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய தோட்ட முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின் உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த், தனது வீட்டுக்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல் மாதம் தோட்ட முகாமையாளரிடம் கடிதம் வழங்கியிருந்தார்.

மூன்று மாதங்கள் கடந்தும் பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் திகதி அது குறித்து வினவுவதற்காகச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் சாணக்க தன்னைத் தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், தாக்குதலுக்குள்ளான இளைஞர் அன்றைய தினமே ஹாலிஎல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், முகாமையாளர் சாணக்கவை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், உனுகல்ல தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அத்துடன், தோட்டக் காரியாலயத்தில் உள்ள அதிகாரிகள் மக்களுக்குச் சரியான சேவைகளை வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 20 ஆம் திகதி தோட்டத்தின் உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்திற்கு வருகை தந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காகப் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0