குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கு தற்காலிக தடை.!
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது திருவுருவச் சிலை அவர்களது 43 ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25.7.2026 அன்று நிறுவுவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் சிலை நிறுவுனர்களில் ஒருவரான சதீஷ் அவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அங்கு வாக்குமூலம் பெறப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட பலர் ஆஜராகியிருந்த நிலையில் பருத்தித்துறை கௌரவ நீதவான் எதிர்வரும் நான்காம் திகதி வரை குறித்த சிலை நிறுவுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளையை பிறப்பித்துள்ளார்.

